1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (20:07 IST)

டும் டும் டும்... காதலரை கரம்பிடிக்க போகும் பிரியா பவானி ஷங்கர்!

நடிகை பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு பிச்சி உதறும் லைக்ஸ்!
 
தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவர் செய்தி வாசிப்பாளராக இருந்த காலத்தில் இருந்தே மென்பொருள் பொறியாளர் ஒருவரை காதலித்து வந்தார். அவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் 18 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகிறார்கள். தற்ப்போது இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக புகைப்படங்களுடன் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார் பிரியா பவானி. இதையடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.