1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (17:02 IST)

கொரோனா நிதிக்காக இசைக் கச்சேரி நடத்தி ரூ.980 கோடி உதவி !

உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரொனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரண நிதிக்காக பிரபல சினிமா, விளையாட்டு, நட்சத்திரங்கள்  ஏழை, எளிய மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில்,கொரொனா நிவாரணத்திற்காக நடத்தப்பட்ட இணைய வழிக் கச்சேரியில் 980 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

அதில், பிரபல பாப் இசைப்பாடகி, லேடி காகாவும், உலக சுகாதார நிறுவனமும் நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு, one world , together at home என்று பெயரிடப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ,பால் மெக்கார்டினி, எல்டன் ஜான், உள்ளிட்ட பிரபலங்கள் வீட்டில் இருந்த படியே கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்சியை வீட்டில் இருந்த படியே ரசிகர்கள் கண்டு ரசித்தனர். இதன் மூலமாக ரூ.980 கோடி நிதி திரட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.