ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 மே 2021 (16:17 IST)

ரூ.20,000 கோடி மக்களையும் காக்கவில்லை...நதிகளையும் காக்கவில்லை - கமல் டுவீட்

கங்கை நதியைக் காக்க  மத்திய அரசு ரூ. 20000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது நிலை காண்போரை  கவலையுரச் செய்கிறது. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புனிதமாகக் கருதப்படும் கங்கை நதியில் தற்போது இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கிறது. இந்தியாவில் பரவிவரும் கொரொனா இரண்டாம் வகைத் தொற்றால் ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். வட மாநிலங்களில் இந்தப் பிணங்கள் கங்கை ஆற்றில் வீசி எறியப்பட்டு மிதந்துவருவதாகக் கூறப்படுகிறது.

கங்கை நதியைக் காக்க  மத்திய அரசு ரூ. 20000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது நிலை காண்போரை  கவலையுரச் செய்கிறது. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன  எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து லைக்குகள் குவித்து வருகின்றனர்.