1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (09:01 IST)

நதிகள், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை: தமிழக அரசு உத்தரவு

நதிகள், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை: தமிழக அரசு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக நதிகளிலும் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் கடற்கரைகள் பூங்காக்கள் ஆகியவற்றை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் நடிகளில் மற்றும் அருவிகளில் மட்டுமாவது சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று இருந்தனர். ஆனால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது 
 
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதாகவும் இதனால் ஏராளமானோர் தங்களுடைய வருமானத்தை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.