செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 மே 2021 (08:24 IST)

ஒத்த கன்னட சினிமாவுக்கு போட்டிபோடும் டஜன் தயாரிப்பாளர்கள்!

கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள ராபர்ட் என்ற படத்தின் ரீமேக் உரிமையை வாங்க போட்டோ போட்டி நடக்கிறதாம்.

கன்னட நடிகர் தர்ஷன் நடிப்பில் இயக்குனர் தருன் சுதிர் இயக்கிய திரைப்படம் ராபர்ட். கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் கன்னட சினிமாவின் பம்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இந்நிலையில் இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளனராம்.

இந்த உரிமையை பெற பல மொழிகளில் இருந்தும் தயாரிப்பாளர்கள் ஆசைப்படுவதால் ரீமேக் உரிமையும் விலை ஏறிக் கொண்டே செல்கிறதாம்.