புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 மே 2021 (08:11 IST)

வாடிவாசல் பட்ஜெட்டை பார்த்து பதறிய தாணு… ஷாக் கொடுத்த வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் பட்ஜெட்டை தாணுவிடம் கொடுத்துள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

அதே போல வெற்றிமாறனும் இப்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த இரு படங்களும் முடிந்த பின்னரே வாடிவாசல் ஆரம்பிக்கும் என சொல்லப்பட்ட நிலையில்  இந்த ஆண்டு இறுதியில் வாடிவாசல் படம் தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கர்ணன் வெற்றிக்களிப்பில் இருக்கும் தாணு வாடிவாசல் படத்தின் பட்ஜெட் குறித்து வெற்றிமாறனிடம் கேட்க, அவரும் கொட்டோஷன் கொடுத்தாராம்.

அதைப் பார்த்த தாணு சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம். ஏனென்றால் வெற்றிமாறன் கொடுத்த பட்ஜெட் தொகை கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயாம். சூர்யா மார்க்கெட்டுக்கு அவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்தால் கையைக் கடிக்கும் என தாணு யோசனை செய்து வருகிறாராம்.