டிவி சேனல்களுக்கு ஆர்கே செல்வமணி விடுத்த முக்கிய வேண்டுகோள்
தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது என்பதும் ஒரு படப்பிடிப்பில் அதிகபட்சமாக 60 பேர்கள் வரை கலந்து கொள்ளலாம் என்றும் தனிமனித இடைவெளி, கிருமிநாசினி அவ்வப்போது தெளித்தல், மாஸ்க் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது
இந்த நிலையில் தற்போது தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் தொலைக்காட்சி சேனல்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதன்படி தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்களுக்கும், ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வோர்பவர்களுக்கும் தொலைக்காட்சி நிர்வாகம் கொரோனா வைரஸ் குறித்த இன்ஷூரன்ஸ் எடுத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
இந்த கோரிக்கைகளை பெரும்பாலான தொலைக்காட்சில் நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் பாதிக்கப்பட்டால் இந்த இன்ஷூரன்ஸ் மூலம் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வழி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது