செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (15:51 IST)

படைப்பின் அருமை உணர்ந்து.. மனதில் தூக்கிச் சுமக்கும் கலைஞர் நீ –பிரபல இயக்குநர் டுவீட்

தழிழ் சினிமாவில் நீர்ப்பறவை, தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, கூடல்நகர்,கண்ணே கலைமானே ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக இருப்பவர் சீனுராமசாமி.

இவரது இயக்கத்தில் 4 வருடங்களுக்கு முன் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் தர்மதுரை.

இப்படத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் வானம் ஒன்று தான் என்ற பாடலுக்காக பாடலாசிரியர் வைரமுத்து தேசிய விருது வாங்கினார்.

இப்படத்தை ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார். இந்நிலையில் , இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ஆர்.கே.சுரேஷை பெரிதும் பாராட்டியுள்ளார். அதில், தயாரித்த சினிமாவை சொன்ன தேதியில் சொன்ன படி எடுத்து அதை வெளியிட்டுப் பெருமை சேர்த்து படைப்பின் அருமை உணர்ந்து இன்றும் மனதில் சுமந்து கொண்டாடும் கலைஞனே @RkSuresh7நீர் வாழ்க @VijaySethuOffl@tamannaahspeaks@realradikaa@thisisysr என்று பதிவிட்டுள்ளார்.