ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (21:25 IST)

விஜய்தேவரகொண்டா பற்றி மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா!

vijayadevarakonda -rashmika mandana
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர், அல்லு அர்ஜூனுடன் இணைந்து புஷ்பா, விஜயுடன் இணைந்து வாரிசு ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில், இவர் ரன்பீர் கபீருடன் இணைந்து நடித்த அனிமல் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ராஷ்மிகா மந்தனா முன்னணி  நடிகையாக அறியப்படுகிறார்.

சமீபத்தில் விஜய்தேவரகொண்டாவுக்கும் அவருக்கும் இடையே காதல் இருப்பதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியானது.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் நடிகை ராஷ்மிகா மந்தனா. நான் எதை செய்தாலும், விஜய் தேவரகொண்டாவிடம் ஆலோசனை கேட்டுவிட்டுத்தான் செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், நானும் விஜயும் ஒன்றாக வளர்ந்தோம்,. என் வாழ்க்கையில் நான் எது செய்தாலும், அதில் அவரது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். என்னுடைய வாழ்க்கையில் மற்றவர்களைவிட தனிப்பட்ட முறையில் அவர் என்னை நிறைய ஆதரித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.