திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (13:32 IST)

மார்பிங் வீடியோவால் தற்கொலைக்கு முயன்றேன்- நடிகை அனுயா பேட்டி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை அனுயா சமீபத்திய பேட்டியில்  இணையதளத்தில் வெளியான மார்பிங் வீடியோவால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில்  நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம்  ஹீரோயினாக அறிமுகமானவர் அனுயா. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து, விஜயுடன் இணைந்து, நண்பன், மதுரை சம்பவம், நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு பாடகி சுதித்ராவின் எக்ஸ் வலைதள பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் சினிமா நட்சத்திரங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய புகைப்படங்களை  வெளியிட்ட்னர். இதில் நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவும் வெளியானது.

இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இதுகுறித்து சமீபத்திய  பேட்டியில், தான் தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பு இணையதளத்தில் என்னை பற்றி வெளியான மார்பிங் வீடியோவால் நான் மனவேதனை அடைந்தேன். அந்தப் பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல்  தற்கொலை செய்யும் எண்ணம் எனக்கு வந்தது. ஆனால் என் குடும்பம் அந்த எண்ணத்தை மாற்றியது.  என் குடும்பத்தினர் என்னுடன் இல்லையெனில் நான் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டேன். என் குடும்பத்தினர்  என்னைப் புரிந்துகொண்டு துணையாக இருந்தனர் என்று தெரிவித்தார்.