வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2021 (13:25 IST)

2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் - பிக்பாஸிற்கு பிறகு அடித்த ஜாக்பாட்!

ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன். அதில் ரசிகர்கள் கிறங்கி போனதை பார்த்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது.
 
குக் வித் கோமாளி மூலம் இன்னும் பிரபலமான அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அலேக்காக தூக்கி சென்றனர். அந்த நிகழ்ச்சியின் ஃபைனல் ரவுண்ட் வரை சென்று வெளியேறிய ரம்யா பாண்டியன் தற்ப்போது புதிய படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். 
 
அந்தவகையில் தற்போது, அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் புது படமொன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.  2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின்  அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 
 
இது கூறிய ரம்யா பாண்டியன். இயக்குனர் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே உடனே ஒப்புக் கொண்டு தேதிகள் ஒதுக்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார். தற்போது ரம்யா பாண்டியனுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.