1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (08:14 IST)

திரைப்படமாகும் ஹைதராபாத் பாலியல் சம்பவம் – இயக்குனர் யார் தெரியுமா ?

ஹைதராபாத்தில் சில மாதங்களுக்கு முன்னர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பிரியங்காவின் கதையை இயக்குனர் ராம்கோபால் திரைப்படமாக எடுக்க இருக்கிறார்.

ஐதராபாத்தில் நள்ளிரவில் தனிமையில் இருந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா என்பவரை நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தது நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களை ஹைதராபாத் போலீசார் என்கவுன்டர் செய்து சுட்டுக் கொன்றனர். இந்த உடனடி தண்டனை பொது மக்களின் கூட்டு மனப்பாண்மையை திருப்தி படுத்துவதற்காக செய்யப்பட்டது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா திஷா என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் ‘என்னுடைய திஷா திரைப்படம் நிர்பயா கொலை போன்ற பாலியல் பலாத்கார கொலைகளுக்குப் பின் இருக்கும் உண்மையை பேசும். நிர்பயா வழக்கில் நீதிமன்றத்தில் புட்பால் விளையாடும் வழக்கறிஞர் ஏ பி சிங்குக்கும் உடனடித் தண்டனையை கொண்டாடும் மக்கள் குறித்தும் விளக்கமாகப் பேசும்.’ எனத் தெரிவித்துள்ளார்.