புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 டிசம்பர் 2019 (10:34 IST)

பேச்சே கிடையாது, டேரக்ட் என்கவுன்டர் தான்... கொந்தளிக்கும் சீமான்!!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெலங்கானா என்கவுண்ட்டரை ஆதரித்து ஆவேசமாக பேசியுள்ளார். 
 
சென்னை ஆர். ஏ. புரத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட சீமான் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அந்த பேட்டியில் அவர் கூறியதாவது...
 
தண்டனை வழங்காமல் குற்றச் செயல்கள் குறையாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும், தெலங்கானா என்கவுன்ட்டரை போலவேதான் தீர்புகள் வழங்குவோம். குறிப்பாக தெலங்கானா என்கவுன்ட்டரை நான் வரவேற்கிறேன்.
 
இன்றைய சூழலில் 6 வயதுக் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்கிறார்கள் என்றால், அவரை தண்டிக்காமல் சிறையில் அடைப்பது மிகப் பெரிய குற்றமாகும் எனக் கூறினார்.