செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 அக்டோபர் 2018 (11:24 IST)

பரியேறும் பெருமாளை பாராட்டிய ரஜினிகாந்த்!

பரியேறும் பெருமாள் திரைப்படம் ஒரு நாவலைப் போல எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் பரியேறும் பெருமாள். 
 
மாரி செல்வராஜ் இயக்குனர்கள் ராம் மற்றும் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தத் திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்  தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்திருந்தார். கதிர், ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
 
 தற்போது பரியேறும் பெருமாள் திரைப்படம் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்தும் இந்தப் படத்தைப் பார்த்து, படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை வெகுவாக பாராட்டியிருக்கிறார். மேலும், "ஒரு நாவலைப்போல இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள் எனவும் . பல காட்சிகளில் நான் சிலிர்த்துவிட்டேன், மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். என நடிகர்  ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.