Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சத்குருவுக்குத் துணையிருக்க வேண்டும்” – ரஜினி சூசகம்


Cauveri Manickam (Abi)| Last Updated: திங்கள், 11 செப்டம்பர் 2017 (17:41 IST)
‘சத்குருவுக்குத் துணையிருக்க வேண்டும்’ என ரஜினி சூசகமாக எதையோ கூறுகிறார் என்கிறார்கள்.

 

 
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா தியான மையத்தின் சார்பில் ‘நதிகளை மீட்டெடுப்போம்’ என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கிய இந்தப் பிரச்சாரம், ஒரு மாதம் வரை நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னையில் நேற்று விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்ட ரஜினி, கடைசி நேரத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக வீடியோ வடிவில் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
 
“நதிகளைப் பாதுகாக்க வேண்டியது நம் எல்லோரின் கடமை. அனைத்து இந்திய நதிகளையும் ஜீவ நதியாக்க வேண்டும். இதற்கு மாபெரும் முயற்சி மேற்கொண்டிருக்கும் சத்குருவுக்குத் துணையிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் ரஜினி. இதில், சூசகமாக ஏதோ சொல்லியிருக்கிறார் ரஜினி என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :