Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி உங்களுக்கு புரிய வைப்பார் - ரஞ்சித்துடன் மோதும் எஸ்.வி.சேகர்

திங்கள், 11 செப்டம்பர் 2017 (16:07 IST)

Widgets Magazine

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கும், இயக்குனர் ரஞ்சித்திற்கும் இடையே சாதி குறித்த கருத்து மோதல் டிவிட்டரில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


 

 
சமீபத்தில் இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தபோது அமீர் பேச்சுக்கு ரஞ்சித் மிக ஆக்ரோஷமாக பதிலளித்தார்.
 
இதுகுறித்து கருத்து கூறியுள்ள நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், "தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித்." தன் ஜாதியை பெருமையாக சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்' என ஒரு டிவிட் போட்டிருந்தார். 
 
அதற்கு பதில் கூறிய இயக்குனர் ரஞ்சித், 'தலித் என்பது சாதியல்ல, ஆரியம்-சாதியம் ஒழிக்கும் விடுதலைக்கருத்தியல்' என்று கூறினார். இருவரது கருத்துக்களுக்கும் லைக்குகளும் ஷேர்களும் குவிந்து வருகின்றன.
 
இந்நிலையில், ரஞ்சித்தின் கருத்திற்கு பதிலளித்துள்ள எஸ்.வி.சேகர் “வெற்றி வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள்.என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார்” எனக் கூறியுள்ளார்.
 
இதையடுத்து, ரஞ்சித்தின் ஆதரவாளர்கள், எஸ்.வி.சேகருடன் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மனோரமா இடத்தில் கோவை சரளா

பேராண்டி படத்தில் மனோரமா நடிக்க இருந்த பாட்டி வேடத்தில் தற்போது கோவை சரளா நடிக்க உள்ளார்

news

பிக்பாஸ் வீட்டில் 6 பிரபலங்களிடையே நிலவும் கடுமையான போட்டி - ப்ரொமோ

பிக்பாஸ் வீட்டில் இருந்து வாரம் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும். இந்த வாரம் ஹரிஷ் கல்யாண், ...

news

“டபுள் மீனிங்லாம் கிடையாது… நேரடியா ஒரே மீனிங்தான்…”

‘டபுள் மீனிங்லாம் கிடையாது… நேரடியா ஒரே மீனிங்தான்’ எனத் தெரிவித்துள்ளார் காமெடியன் சதீஷ்

news

சூர்யா – ஜோதிகாவின் 11வது திருமண நாள்

சூர்யா-ஜோதிகா, 11வது திருமண நாள், தானா சேர்ந்த கூட்டம், நாச்சியார், தமிழ் சினிமா, ...

Widgets Magazine Widgets Magazine