1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (19:17 IST)

போலீஸாரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி! ஏன் தெரியுமா?

rajinikanath
ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடக்கவிருந்த செஸ் போட்டில் தற்போது தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் என்ற பெயரில் நடந்து வருகிறது.

சென்னையில்  நேற்று இப்போட்டி தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளுடன் கலந்துகொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்..

இந்த நிலையில்,  நேற்று செஸ் ஒலிம்பியாட்  நிகழ்ச்சிக்கு தன்னை வீட்டில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலீஸ்காரரை இன்று தனது வீட்டிற்கு அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டினார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.