திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 12 டிசம்பர் 2018 (09:59 IST)

ரஜினி அமர்ந்து சென்ற நாற்காலியுடன் செல்பி எடுக்கும் ரசிகர்கள் !

'பேட்ட' இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்  ரஜினி அமர்ந்த இருக்கையில், அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்தனர்.


 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'பேட்ட' இசை வெளியீட்டு விழா சென்னை, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. படத்தின் ஆறு பாடல்களும், தீம் மியூசிக் கொண்ட ஆடியோவும் வெளியானது. 
 
இந்த விழாவில் இயக்குநர் சுப்புராஜ், ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, கலாநிதி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 
இந்நிலையில் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு வந்த ரஜினியின் ரசிகர்கள், ரஜினி அமர்ந்திருந்த காலி சோபா அருகில் குவிந்து நின்று செல்ஃபி எடுத்துச் சென்றனர்.