ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 மே 2023 (20:09 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார் என்பதும் அவருடன் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப்,  தமன்னா,   உள்ளிட்ட நடிகர்கள்  நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அண்மையில் ஒரு புரொமோ வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

தற்போது, இப்படத்தின்  போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்துடன் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில்  உருவாகி வரும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மும்பைக்குச் சென்றார் ரஜினிகாந்த்.
kapil dev -rajinikanth

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்வுடன்  நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.