1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (10:00 IST)

கோயில் கோயிலாக சென்று யாகம் செய்தேன்… ஆனால் ஏமாற்றம்தான் – ரஜினி சகோதரர் கருத்து!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காததது ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளதாக அவரின் சகோதரர் சத்ய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தான் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்து அதிர்வுகளை ஏற்படுத்தினார். பல தரப்பில் இருந்தும் இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ரஜினியின் மூத்த சகோதரரான சத்யநாராயண ராவ் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இந்து தமிழ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘ரஜினியின் இந்த முடிவை தொலைக்காட்சிகளில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் பேசிய போது கூட அவர் இதைப் பற்றி சொல்லவில்லை. கடவுளின் ஆசீர்வாதம் முழுமையாக இருக்கும் நபர் அவர்.. சினிமாவில் சாதித்ததைப் போல அரசியலிலும் சாதிப்பார் என நம்பினேன். அதற்காக கோயில் கோயிலாக சென்று யாகம் நடத்தினேன். ஆனால் அவரின் அறிக்கையைக் கேட்டதும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. ரஜினியின் உடல்நிலையை முன்னிட்டு அந்த முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன். ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.