வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (15:20 IST)

ரஜினியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ்!

ரஜினிகாந்த் உடல்நிலையை  விட தமிழ்நாடே முக்கியம் என அரசியலில் இறங்குவது குறித்து முடிவை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நீண்ட காலமாக அரசியல் கட்சி தொடங்குவதில் இழுபறி செய்து வந்த நடிகர் ரஜினிகாந்த் ஒருவழியாக அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது தொண்டர்கள் பல இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள ரஜினிகாந்த் ”கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றும் பின் வாங்க மாட்டேன். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் நிச்சயம் நடக்கும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொரோனாவால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. எனினும் இந்த அரசியலில் ரான் வெறும் கருவிதான். மக்கள்தான் என்னை இயக்குபவர்கள். இந்த தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் அது மக்களுடைய வெற்றி அல்லது தோல்விதான்” என கூறியுள்ளார்.

மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் “அண்ணாத்த” படப்பிடிப்பை முடித்து கொடுக்க வேண்டிய கடைமை இருப்பதால், அது முடிந்ததும் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினி ரசிகராக தன்னைக் காட்டிக்கொள்ளும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரஜினியின் இந்த முடிவு குறித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘நன்றி தலைவா. இந்த செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் கட்சி ஆரம்பிக்கவேண்டும் என்று காத்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகரில் நானும் ஒருவன். உங்கள் லட்சியம் நிறைவேற நான் ராகவேந்திராவிடம் வேண்டிக் கொள்கிறேன். கொரோனா சூழலில் உங்கள் உடல்நிலையை பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளீர்கள். நிச்சயம் உங்கள் கனவு நிறைவேறும்.’ எனத் தெரிவித்துள்ளார்.