திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (17:15 IST)

முகம் சுளிக்க வைக்கும் ஆர் ஜே பாலாஜியின் தமிழ் கமெண்ட்ரி! ரசிகர்கள் கடுப்பு!

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் வர்ணனை என்ற பெயரில் கொத்துக்கறி போடுவதாக ஆர்ஜே பாலாஜி மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வானொலியில் ஆர் ஜே வாக இருந்த ஆர் ஜே பாலாஜி தன் திறமையால் சினிமாவுக்குள் நுழைந்து இப்போது ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கிறார். இந்நிலையில் அவர் ஸ்டார் ஸ்போட்ஸ் தமிழில் கிரிக்கெட் வரண்னையும் செய்து வருகிறார். இப்போது ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் அவரின் வர்ணனை மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் பற்றி எதுவுமே தெரியாமல் பரீட்சைக் கேள்விக்கு பதில் தெரியாத மாணவன் என்னவென்னமோ எல்லாம் உளறி தேர்வுத்தாளை நிரப்புவது போல வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவதாக ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழில் வர்ணனை செய்பவர்கள் எல்லாருமே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களாகவே இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.