1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2019 (16:03 IST)

பாக்க சய்லெண்ட்டா இருந்தாலும் ஆளு படு சூரி: உதயநிதிக்கு கட்சிக்குள் குட் நேம்!

உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சிக்குள் நற்பெயர் வந்துவிட்டது. அவரது உழைப்பை வெகுவாக மூத்த நிர்வாகிகள் பாராட்டி வருகிறார்களாம். 
 
திமுக இளைஞர் அணி செயளாலராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட போது பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுகவில் இருந்த சிலருக்கும் தலைமையின் இந்த முடிவில் வெளியே கூற முடியாத அதிருப்தியும் இருந்தது தெரிந்ததே. 
 
ஆனால், இப்போது அந்த அதிருப்தி எல்லாம் மாறி வருகிறதாம். உதயநிதி ஸ்டாலின் பார்ப்பதற்கு அமைதியாக காணப்பட்டலும் தனது வேலைகளிலும் நிர்வாகிகளை கவனித்துக்கொள்வதிலும் கில்லாடியாக உள்ளாராம். 
தற்போது கலைஞர் பாணியில், உள்ளாட்சி தேர்தலுக்கு இளைஞர் அணிக்கென தனியாக சீட் கேட்டு அதில் சிறப்பாக களப்பணியாற்றும் இளைஞர்களை போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இளைஞர் அணியில் உள்ள அனைவரையும் கவனத்துடன் கண்காணித்து வருகிறாராம். 
 
தனது கட்டுப்பாட்டிலும் தனது கண் பார்வையிலும் இளைஞர் அணி நிர்வாகிகளை வைத்துள்ளாராம். நிர்வாகிகளும் உதயநிதியின் ஊக்கத்திலும், கட்சியில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்திலும் செயல்பட்டு வருகிறார்களாம்.