1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (10:55 IST)

சர்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா திருமணம்

தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் திருமணத்தில் சீக்கிய மதசடங்குகளை மீறியதாக எதிர்ப்புகள் கிளம்பியது. அதுபோல பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்சு  திருமணத்திலும் சர்ச்சை கிளம்பி உள்ளது.

திருமணம் முடிந்ததும் ஜோத்பூர்அரண்மனை முன்னால் வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. அதை பார்த்தவர்கள் பிரமித்தனர். தொடர்ச்சியாக பட்டாசுகளை வெடித்ததால் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது.
 
இதனால் காற்று மாசுபட்டதாக சுற்றிலும் வசித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதை குறைத்து மாசு பரவுவதை தவிர்த்து என்னை போல் ஆஸ்துமா இருப்பவர்களுக்கு உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த பிரியங்கா சோப்ரா தனது திருமணத்தில் மட்டும் வான வேடிக்கையை அனுமதிக்கலாமா? என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சத்தனர்.