1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Modified: ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (14:01 IST)

ஒரு வழியாக காதலனை திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா

கத்தோலிக்க முறைப்படி நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதலர் நிக் ஜோன்ஸை நேற்று திருமணம் செய்துகொண்டார்.
36 வயதாகும் பிரியங்கா சோப்ராவும், 26 வயதாகும் ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸும் நீண்ட காலமாக நீண்ட நாளாக காதலித்து வந்தனர். இருவரும் கடந்த ஜூலை மாதம் தங்களது காதலை ஒப்பு கொண்டதுடன்,  விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தனர். 
 
இதைத்தொடர்ந்து இவர்களது திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜோத்பூரிலுள்ள உமெய்த் பவன் பேலஸில் கத்தோலிக்க முறைப்படி பிரியங்கா - நிக் ஜோன்ஸ் ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்துக்கு இருவீட்டாரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
 
எனினும்  திருமணத்தில் கட்டுப்பாடு காரணமாக இவர்களின் திருமணப் புகைப்படங்கள் தற்போது வரை வெளியாகிவில்லை.