1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 26 மார்ச் 2022 (14:23 IST)

தங்க நிற உடையில் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்- வைரல் புகைப்படம்!

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக அவர் அந்த புகைப்படத்தில் மாடர்ன் உடையில் இருப்பதால் பலரும் அடையாளமே தெரியவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.