வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 26 மார்ச் 2022 (10:13 IST)

கலாய்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அட்மின்… கடுப்பான சஞ்சு சாம்சன் –என்ன பண்ணிருக்காரு பாருங்க!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை கோமாளி போல சித்தரித்து அந்த அணியின் சமூகவலைதளத்தில் ஒரு பதிவு வெளியாகி இருந்தது.

ஐபிஎல் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்கள் சமூகவலைதளப் பக்கங்களின் மூலம் அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் அதிகம் கவனம் ஈர்த்துவருவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமூகவலைதளப் பக்கம்தான். நகைச்சுவையாக பல பதிவுகளை அவ்வப்போது அந்த பக்கத்தின் அட்மின் பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் என்று சஹால் புகைப்படத்தை பதிவு செய்து குழப்பத்தை உண்டாக்கி, பின்னர் அது நகைச்சுவையாக பண்ணியது எனக் கூறியிருந்தனர். இந்நிலையில் இப்போது அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை கோமாளி போல சித்தரிக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர அதைப் பார்த்து கடுப்பாகிவிட்டார் சஞ்சு.

அந்த புகைப்படத்தில் ’நண்பர்களுக்குள் இப்படி விளையாடுவது வாடிக்கை. ஆனால் அணி என்றால் ஒரு அணி என்றால் அது புரொபஷனலாக இருக்கவேண்டும்’ எனத் தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.