Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சமூக வலைதளத்தில் வைரலாகும் காலா சண்டைக்காட்சி வீடியோ

Last Updated: திங்கள், 12 பிப்ரவரி 2018 (21:30 IST)
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் சண்டைக்காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளதால், படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா' படத்தை முன்னதாக வெளியிட படக்குழு ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்  நிலையில், படத்தின் சண்டைக்காட்சி வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :