வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (21:16 IST)

அதிரவைத்த அரசியல் செய்தி! ஆடிப்போன பிரபு

கண்ணக்குழி சிரிப்புடன் கலகலவென எப்போதும் காணப்படுபவர் நடிகர் பிரபு. நாயகன் அவதாரத்தில் இருந்து நாயகனின் தந்தை அவதாரத்துக்கு மாறி பல வருடங்களாக விட்ட பிரபு, வரும் அத்தனை விளம்பரங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். 
 
தான் உண்டு தான் வேலையுண்டு என்று காணப்படும் பிரவுக்கு இன்று வந்த ஒரு தகவலை கேட்டு ஆடிப்போய்விட்டார். பிரபு காங்கிரசில் சேரப்போவதாக வந்த தகவல்தான் அது. இது தொடர்பாக  மீடியாக்கள் அவரிடம் கேள்வி கேட்டன. 
 
அதற்கு பிரபு கூறுகையில், "அரசியலில் நான் சேர்ந்தேன் என்றால், உங்களை எல்லோரையும் கூப்பிட்டு ஒரு பெரிய விஷயமாகவே சொல்வேன். நான் இப்பவெல்லாம் அரசியலில் இறங்குவதாக உத்தேசம் இல்லை. அப்படி ஏதாவது கேட்கணும்னா, என்கிட்ட நேரடியாக போன்பண்ணியே கேட்கலாம். என் தந்தை காங்கிரஸ் கட்சிக்க உறுதுணையாக இருந்தார். அப்பாவின் ரசிகர்கள் பலர் இன்றும் அந்த கட்சியில் இருக்கிறார்கள். அவங்க யாராவது ஆசைப்பட்டு செய்திகள போட்டிருப்பாங்க. அதுவந்து வைரலாகிவிட்டது. மற்றபடி நான் எந்த கட்சியிலும் சேரவில்லை" என்று அவசரமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.