ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 12 மே 2018 (18:41 IST)

இயக்குனர் மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

இயக்குனர் ஒருவர் மீது பிரபல நடிகை பூனம் கவூர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
 
 
நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று கூறி தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு புகார்களை தெரிவித்து வருகிறார். இதனால் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வரிசையில் தமிழில் நெஞ்சிருக்கும் வரை, வெடி, நாயகி உள்ளிட்ட பல படங்களில் நடித்த தெலுங்கு பட நடிகை பூனம் கவூர் இயக்குனர் ஒருவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டி ஒன்று தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;-
 
“அந்த இயக்குனருக்கு படங்கள் அதிகம் இல்லை. எனவே அவர் மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடி வருகிறார். என்னுடய வாழக்கையை பற்றி அவர் தவறாக பேசுகிறார். நான் அதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது ஒன்றும் தெரியாதவர்போல் பதில் சொன்னார். 
 
சினிமாவில் அவருக்கு வேண்டிய பெண்கள் தோல்வி கொடித்தாலும் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தருகிறார். சினிமாவில் அந்த பெண்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரை பற்றிய பல விஷயங்களை வெளியே சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். இவர் அந்த இயக்குனரின் பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.