1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 5 மே 2018 (14:15 IST)

விஜய்யிடம் கதை சொல்லிக் காத்திருக்கும் இயக்குநர்கள் யார் யார் தெரியுமா?

விஜய்யிடம் கதை சொல்லிக் காத்திருக்கும் இயக்குநர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 62வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்த வருட தீபாவளிக்குப் படம் ரிலீஸ் என்பதால், வேகவேகமாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை, அதாவது 63வது படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மோகன் ராஜா, ஏ.எல்.விஜய், வெற்றிமாறன், அமீர் என ஒரு பட்டாளமே அவரிடம் கதை சொல்லிக் காத்திருக்கிறார்கள். இதில் யாரை அவர் ஓகே செய்கிறார் என்பதுதான் மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.