1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (21:12 IST)

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா தஞ்சையிலா?

ponniyin
பொன்னியின் செல்வன் டீசரின் வெளியீட்டு விழா தஞ்சையில் நடக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது 
 
பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் ராஜராஜ சோழன் ஆட்சி செய்தபோது தஞ்சை தலைநகரமாக இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை டீசர் வெளியீட்டு விழாவை தஞ்சையில் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என மணிரத்னமும் படக்குழுவினர்களூம் கருதியுள்ளனர் 
 
இதனையடுத்து இந்த படத்தின் டீசரை தஞ்சையில் வைத்து நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த டீசர் வெளியீட்டு விழாவில் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் இந்த விழாவில் லைகா நிறுவனர் சுபாஷ்கரண் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது