தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த ‘அரபி’… இணையத்தில் கவனம்பெறும் டீசர்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த அரபி என்ற திரைப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப காரணம் காரணமாக டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் பற்றி பேசிய அண்ணாமலை “கர்நாடகாவில் நீச்சல் வீரர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஒரே ஒரு படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நான் நடித்து உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. டீசரில் அண்ணாமலை நீச்சல் வீரருக்கு பயிற்சி அளிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.