1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 23 ஜனவரி 2019 (20:43 IST)

பால திருடிருவானுங்க... சிம்பு ரசிகர்களுக்கு அவமானம்

சமீபத்தில் சிம்பு வெளியிட்ட ஒரு வீடியோவில் தனது படம் வெளியாகும் தினத்தில் ரசிகர்கள் பேனர், கட் அவுட் வைப்பது,  பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்திருந்தார்.
 
சிம்புவின் இந்த வீடியோவுக்கு பெரும் பாராட்டு கிடைத்த போதிலும் ஒரு சிலர் சிம்புவுக்கு இருப்பதே ஒன்றிரண்டு ரசிகர்கள்தான். இதற்கு இந்த பில்டப் தேவையா? என்று கலாய்த்தனர்.
 
இதனால் கடுப்பான சிம்பு நேற்று தனது மாஸை நிரூபிக்க ''வந்தா ராஜாவாதான் வருவேன்' பட ரிலீசின் போது எனது ரசிகர்கள் எனக்கு கட் அவுட் வைங்க, அண்டா அண்டாவா பாலாபிஷேகம் செய்யுங்க, வேற லெவலில் கொண்டாடுங்க என்று ரசிகர்களுக்கு தெரிவித்தது கடும் சர்ச்சைகளுக்கு உள்ளானது. 
 
அப்போதே சிம்புவின் இந்த வீடியோவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக பால் முகவர்கள் சிம்பு தனது செயலுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடருவோம் என கூறியிருந்தனர். 
 
இந்நிலையில், வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியாகும் நாளில் பால் முகவர்களின் கடைகளில் இருந்து பால் திருடு போகாமல் தடுக்க, சிறப்பு பாதுகாப்பு அளிக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் முடிவு செய்துள்ளது.
 
பால் ஊற்ற பால வாங்குவதற்கு பதில் திருடி எடுத்துக்கொண்டு போவார்கள் என்பது போல இவர்களது முடிவு உள்ளது என பலர் இதனை யூகித்து வருகின்றனர். இவர்களின் இந்த முடிவு சிம்பு ரசிகர்களுக்கு பெருத்த அவமானத்தை கொடுத்துள்ளது.