1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 15 மார்ச் 2018 (15:14 IST)

பிரியாமணி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சங்கத்தில் புகார்

பிரியாமணி, பட அதிபரிடம் நஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
நடிகை பிரியாமணி தொழில் அதிபர் முஸ்தபா ராஜை காதல் திருமணம் செய்து கொண்டார். தெலுங்கில் தயாராகி உள்ள ‘ஆங்குலிகா’ என்ற படத்தில் பிரியாமணி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 5 வருடங்களுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது, ஆனால் சில காட்சிகளில்  நடித்ததும் பிரியாமணிக்கு தொடர்ந்து அந்த படத்தில் நடிக்காமல், படத்திலிருந்து விலகிவிட்டார்.
 
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து டிரெய்லரை வெளியானது. இதனை பார்த்த பிரியாமணி, தான் நடித்த காட்சிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து அவர் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ஆங்குலிகா படத்திலிருந்து  நான் 5 வருடங்களுக்கு முன்பே வெளியேறிவிட்டேன். ஆனால் டிரெய்லரில் விளம்பரத்துக்காக, நான் அந்த படத்தில் நடித்து இருப்பது போன்று காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.