செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (20:51 IST)

சந்தானத்தை கைதியாக்க இருக்கும் “ஏ1” திரைப்படம்- குவியும் புகார்கள்

சந்தானம் நடித்து வெளியாகவுள்ள “ஏ1” திரைப்படத்தை தடை செய்ய கோரியும், சந்தானத்தை கைது செய்ய சொல்லியும் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ஏ1 (அக்யூஸ்ட் 1)”. இந்த படத்தின் முதல் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியானது.

படத்தில் பிராமண சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் மற்ரும் வசனங்கள் இருப்பதாக பலர் விமர்சிக்க தொடங்கினார்கள். அதை தொடர்ந்து “ஏ1” திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று திருச்சியில் இந்து தமிழர் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதை தொடர்ந்து பழனியை சேர்ந்த பிராமண சங்கத்தினரும் புகார் அளித்துள்ளனர். பிராமண சமுதாயத்தை இழிவுப்படுத்தும் சந்தானம் மற்றும் பட இயக்குனரை கைது செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

முதற்கட்ட டீசரில் லோக்கல் பையனுக்கும், அக்ரஹாரத்து பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் ஏ1 என்பதன் விளக்கமே அக்யூஸ்ட் (கைதி) என்று பொருள்படும்படி இருக்கிறது. கைதி படம் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ ரிலீஸ் ஆக முடியாதபடி சந்தானம் உண்மையாகவே கைதி ஆகிடுவார் போல என கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.