1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (11:05 IST)

ஆறுதல் பிச்சைக்கு கை நீட்டாம.. நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம்! – பார்த்திபன் விழிப்புணர்வு ட்வீட்!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் நடிகர் பார்த்திபன் வாக்களிப்பது குறித்து விழுப்புணர்வு பதிவு செய்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு இலவசங்களையும், வாக்குறுதிகளையும் மக்களுக்கு வழங்கி வருகின்றன.

இந்நிலையில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ” ஏப்- 1 - ஐ 6-க்கு ஒத்தி வைக்காமல் 'ஆறு"தல் பிச்சைக்கு கை நீட்டாமல் நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம், King- maker-ராக!” என்று பதிவிட்டுள்ளார்.