1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (06:47 IST)

இன்று இரவு 7 மணியுடன் முடிகிறது பிரச்சாரம்: அதன்பின் என்னென்ன செய்யக்கூடாது?

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று இரவு ஏழு மணி உடன் பிரசாரம் முடிவடைகிறது. இன்று இரவு 7 மணிக்கு பிரச்சாரம் முடிவடைந்தவுடன் அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியவர்கள் என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
* ஏப்ரல் 6ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் மின்னணு ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது 
 
* தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த வெளியூர் ஆட்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் 
 
* ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 7 மணி முதல் வாக்குப்பதிவு முடிவு வரை தேர்தல் பொதுக்கூட்டத்தையும், ஊர்வலத்தையும் நடத்தக்கூடாது
 
* திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை, வானொலி, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் ஆகியவற்றிலும் தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமும் பிரச்சாரம் செய்யக்கூடாது
 
* இசை நிகழ்ச்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது 
 
* வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் நாளை மாலை 7 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேறவேண்டும்
 
* திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகியவற்றில் வெளியூர் ஆட்கள் தங்கக்கூடாது
 
* வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் உள்பட வாகன அனுமதிகள் நாளை இரவு 7 மணிக்கு மேல் செல்லாது
 
* வாக்காளர்களை வாக்குச்சாவடி அழைத்துவர வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாடகைக்கு அமர்த்த அனுமதி இல்லை
 
* வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை வேட்பாளர்களின் அரசியல் கட்சிகள் தற்காலிக அலுவலகங்களில் இருவர் மட்டுமே இருக்க வேண்டும்
 
இந்த விதிமுறைகளை விதிமுறைகளை மீறிபவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.