புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (10:19 IST)

'96' படக்குழுவினர்களுக்கு பார்த்திபன் கொடுத்த வித்தியாசமான பரிசு

கடந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களின் பட்டியல் ஒன்றை தயாரித்தால் அதில் முதல் இடம் பிடிக்கும் படமாக '96' திரைப்படம் இருக்கும். காதல் படமாக இருந்தாலும் அனைத்து தரப்பினர்களையும் இந்த படம் கவர்ந்தது. குறிப்பாக ராம், ஜானு கேரக்டர்களை இன்னும் சில ஆண்டுகளுக்கு ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்

இந்த நிலையில் நேற்று சென்னையில் '96' படத்தின் 100வது நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கேடயம் கொடுத்து கெளரவிக்கப்பட்டது.

இந்த நிலையில் '96; படக்குழுவினர்களுக்கு நடிகர் பார்த்திபன் வித்தியாசமான பரிசு ஒன்றை அளித்துள்ளார். '96' என்பதை குறிப்பிடும் வகையில்  9 மற்றும் 6 எண்கள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த கடிகாரம் படக்குழுவினர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் கவர்ந்தது. மேலும் இந்த கடிகாரத்தில் மேல்புறம் 'மக்கள் செல்வன்' என்றும் இடதுபுறம் 'காதலுடன் பார்த்திபன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து பார்த்திபன் தனது டுவிட்டரில், 'இயற்கையாக சினிமாவை காதலிப்பவன் என்பதால்.... 'ஊரார் வெற்றியை ஊக்கி வளர்த்தால், தன் படம் தானாய் வளரும்' என்பதால் என் செலவில் ஒரு கேடயம் வழங்கினேன்-96' என்று குறிப்பிட்டுள்ளார்.