1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 4 பிப்ரவரி 2019 (12:27 IST)

`96’ இயக்குனருக்கு விஜய் சேதுபதி கொடுத்தது ஒன்றல்ல இரண்டு சர்ப்ரைஸ்

ஒளிப்பதிவாளரான பிரேம் 96 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்த படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. 
 



ஒளிப்பதிவாளர் பிரேம்மிடம் தனக்காக,  அண்மையில் விஜய்சேதுபதி ராயல் என்ஃபீல்டின் உயர்ரக இந்திய வாகனமான இன்டர் செப்டர் 650 பைக்கை வாங்குமாறு சொல்லியிருக்கிறார். அவரும் அதே வண்டியை புக் செய்தார். தனது பிறந்தநாளன்று தானே அந்த வண்டியை ஓட்டி வந்த விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேமுக்கு பரிசளித்து விட்டுச் சென்றுள்ளார். இந்த மொத்த சர்ப்ரைஸுக்கு சர்ப்ரைஸாக பைக்கின் பதிவு எண்ணை '0096' என வாங்கியுள்ளார் பிரேம்.