வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (17:13 IST)

டிசம்பர் 21ம் தேதி 'பாரிஸ் பாரிஸ்' டீசர் வெளியீடு

கங்கனா ரனாவத் நடித்த பாலிவுட் திரைப்படமான குயின்,  தமிழில் பாரிஸ் பாரிஸ் என ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 



இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு அமித்திரிவேதி இசையமைத்துள்ளார்.  சத்யாஹெக்டே ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனங்கள் மற்றும் பாடல்களை தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் என நான்கு தென்னக மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வரும் இத்திரைப்படம், ஒரே சமயத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.   மீடியன்டி நிறுவனம் 'பாரிஸ் பாரிஸ்'  தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.