1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (22:34 IST)

ஜோடியாக சுவாமி தரிசனம் செய்த பிக்பாஸ் பிரபலங்கள்; யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பங்குகொண்ட சினிமா பிரபலங்கள், நிகழ்ச்சி முடிந்த பிறகும் மிகவும் பிரபலம் அடைந்துள்ளனர். அதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிந்து மாதவி பிக்பாஸ் நிகழ்சியின் பாதியில் வந்தாலும் நிகழ்ச்சியின் இறுதிவரை தொடர்ந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு, சினிமாவில் வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் பற்றி  எந்த செய்தி வந்தாலும் பிக்பாஸ் பிரபலம் என்று தான் கூறுகிறார்கள். ஓவியா, சினேகன், ஹரிஷ், ரைசா, ஆரவ்  என பலரும்  படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் நடிகை பிந்து மாதவியும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
 
இந்த நிலையில் புகழேந்தி எனும் நான் என்ற படத்தில் பிந்து மாதவி கமிட்டாகியுள்ளார். இது அரசியல் சார்ந்த  படம்  என்றாலும்,  ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில், அருள்நிதியுடன் சேர்ந்து நடிக்கிறார். டிசம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயுள்ளது.
 
இந்நிலையில் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடிகர் ஹரிஸ் கல்யாண், நடிகை பிந்து மாதவி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தானர். கோயிலில் உள்ள நவகிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலர் நெருங்கிய நண்பர்களாகியுள்ளதோடு பார்ட்டி, பொது நிகழ்ச்சிகள்  என்று ஒன்றாகவே சுற்றி வருகிறார்கள்.