பிக்பாஸையே எதிர்த்து பேசிய ஓவியா!

bigboss oviya" width="600" />
sivalingam| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (23:00 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய புகழை டேமேஜ் பண்ண பிக்பாஸ் மற்றும் இதர பங்கேற்பாளர்கள் கஷ்டப்பட்டு மூளையை கசக்கி யோசித்து வருகின்றனர்.


 
 
ஆனால் ஓவியாவை அவமானப்படுத்த அவமானப்படுத்த அவர் மீது பார்வையாளர்களுக்கு பரிவும் பாசமும் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.
 
இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா உள்பட ஒருசிலரை பைத்தியமாக நடிக்க டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஓவியாவுக்கு காதல் தோல்வி அடைந்த பைத்திய கேரக்டர். ஆனால் சில மணி நேரமே நடித்துவிட்டு அதன் பின்னர் நடிக்க மறுத்துவிட்டார்.
 
இந்த நிலையில் ஓவியாவை கன்ஃபெக்சன் அறைக்கு அழைத்த பிக்பாஸ், 'நீங்கள் உங்கள் டாஸ்க்கை தொடர வேண்டும் என்று கூறினார். அதற்கு ஓவியா, 'என்னால் முடியாது. இப்போதுதான் எனக்கு காதல் வந்திருக்கின்றது. என்னால் எப்படி காதல் தோல்வி போல் நடிக்க முடியும். என்னால் முடியாது' என்று கூறிவிட்டார். இதர பங்கேற்பாளர்கள் பிக்பாஸ் சொன்னபடி இதுவரை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஓவியா மட்டுமே பிக்பாஸ் கூறியதை செய்ய முடியாது என்று கூறிய முதல் ஆள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :