ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2024 (16:02 IST)

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

பிரபாஸ் நடித்து நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 2898 ஏடி மூன்றே நாட்களில் 500 கோடியை நெருங்கி வசூல் சாதனை படைத்துள்ளது.



தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளியாகியுள்ள படம் கல்கி 2898 ஏடி. இதில் தீபிகா படுகோன், திஷா பதானி, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் என பேன் இந்தியா அளவில் பலர் நடித்துள்ளனர்.

மஹாபாரதம் முடிந்து கலியுகம் பிறந்து 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு கதை நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. கல்கி அவதாரத்திற்காக மக்கள் காத்துள்ள நிலையில் அங்கு நடக்கும் சம்பவங்களே கதை. மகாபாரதத்தில் சாகாமல் இருப்பதை சாபமாக பெற்ற அசுவத்தாமனாக அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். மேலும் ராஜமௌலி, விஜய் தேவரக்கொண்டா உள்ளிட்ட பலர் கேமியோ ரோல்களிலும் வருகிறார்கள்.

இதனால் இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் கலெக்‌ஷனிலும் கலக்கி வருகிறது. நேற்றுடன் படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் 3 நாட்களில் மட்டும் படம் ரூ.415 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சினிமாவில் 1000 கோடியை தாண்டிய படங்களின் வரிசையில் இன்னும் சில நாட்களில் கல்கியும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K