1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜூன் 2018 (21:37 IST)

உண்மையை மறைக்க தெரியாத ஓவியா, ஒரே நாளில் வெளியேற்றம்

பிக்பாஸ்1 நிகழ்ச்சி நடந்தபோதே ஓவியாவின் உண்மை உலகிற்கு புரிந்தது. ஓவியா என்றால் உண்மை, உண்மை என்றால் ஓவியா என்று கூட சொல்லலாம். ஆரவ் கூட அந்த நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஓவியா பொய் சொல்ல மாட்டார் என்று கூறினார்
 
அந்த வகையில் அதே உண்மையை கடைபிடித்ததால் நேற்று ஓவியா பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஓவியா 17வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக உள்ளே நுழைந்தார். அவர் ஒருவாரம் பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் ஓவியாவின் பெட்டியில் இருந்து உடையை வைத்து அவர் ஒருநாள் மட்டுமே தங்கவிருப்பதாக போட்டியாளர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து உண்மையை ஒப்புக்கொண்ட ஓவியா, நீங்கள் எல்லாம் புத்திசாலிகள்', நான் விருந்தினர் என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள்' என்று கூறினார்
 
இந்த நிலையில் ஓவியா  பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுமாறு பிக்பாஸ் குரல் ஒலித்ததை அடுத்து அவர் ஒருநாள் கூட முழுதாக இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறியது ரசிகர்களுக்குத்தான் வருத்தமே தவிர, வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சிதான் என்பது குறிப்பிடத்தக்கது