செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 ஜூன் 2018 (17:56 IST)

ஒண்ணு போதும் நின்னு பேசும்: டபுள் மீனிங் ஜானரில் களமிறங்கிய அடுத்த இயக்குனர்

ஹர ஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை அடுத்து டபுள் மீனிங் ஜானரில் உருவாகியுள்ள  ஒண்ணு போதும் நின்னு பேசும் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
 
தமிழில் அடல்ட் காமெடி ஜானர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதை குறிவைத்து சந்தோஷ் ஜெயக்குமார் ஹர ஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தை எடுத்தார். இந்த படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
 
இந்நிலையில், புதுமுக இயக்குனர் துரைசந்தோஷ் ஒண்ணு போதும் நின்னு பேசும் என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த டீஸரில் ஹர ஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் வெற்றியை குறிப்பிட்டுள்ளனர்.