புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 ஜூன் 2018 (18:56 IST)

புதிரை உடைத்த யார் இவர்கள் டீஸர்

யார் இவர்கள் என்று சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வலம் வந்த புகைப்படத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

 
சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றில் கடந்த சில நாட்களாக யார் இவர்கள் என்ற தலைப்பில் புகைப்படங்கள் பதிவிடப்பட்டு வந்தது. அது படமா? தொடரா? அல்லது நிகழ்ச்சியா? என்று பலரும் குழப்பத்தில் இருந்தனர்.
 
இன்று அந்த புதிருக்கு விடை கிடைத்துள்ளது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம்தான் யார் இவர்கள். இந்த படத்தில் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.
 
வழக்கமாக சமூக கருத்துக்களை சொல்லும் படங்களை மட்டுமே இயக்கி வரும் பாலாஜி சக்திவேல் இந்த படத்திலும் சமூக அக்கறையுடனே செயல்பட்டுள்ளார். இந்த முறை புரட்சியில் இறங்கியுள்ளார்.