Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெண்களுக்கு மட்டும்தான் மானம் உண்டா? ஆண்களுக்கு இல்லையா?; பிரபல நடிகர் ஆவேசம்

Sasikala| Last Updated: திங்கள், 13 நவம்பர் 2017 (13:13 IST)
சென்னையில் உள்ள மால்களில் நடக்கும் பாதுகாப்பு சோதனை பற்றி இளம் நடிகர் அபி சரவணன் கருத்து தெரிவித்துள்ளார். சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது என கூறியுள்ளார்.

 
 
குட்டிப்புலி, பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபி சரவணன் மால்களில் நடக்கும் பாதுகாப்பு சோதனை குறித்து கூறுகையில், "மால் திரையரங்குகளில் சோதனை என்ற பெயரில் செக்யூரிட்டிகள் தடவுவது தர்ம சங்கடத்தை  ஏற்படுத்துவதாகவும், அருவருப்பாய் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சோதனை செய்யதான் மெட்டல் டிடெக்டர்  இருக்கிறதே? அப்புறம் எதற்காக கையால் வேற தடவி பார்க்கீறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
சரி, பெண்களுக்கு மட்டும்தான் மானம் உண்டா? ஆண்களுக்கு இல்லையா? பெண்களுக்கு உள்ளதைப் போல ஆண்டுகளுக்கும் தனி அறை அமைத்து மறைவில் சோதனை செய்யலாமே? என்றும், அதுவும் கூட மெட்டல் டிடெக்டரில் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஒரு சில திரையரங்குகள் தவிர, மற்ற மால்களில் இது  நடப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :