சிம்பு- வெங்கட்பிரபு படத்தின் தலைப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!
சிம்பு - வெங்கட்பிரபு இணையும் படத்தின் தலைப்பு வெளியிடும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார். இப்படத்தை 2019-ல் வெளியிட படக்கூழு திட்டமிட்டுள்ளது. படத்தின் நாயகியாக நடிக்க நடிகை கீர்த்திசுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளார். அதில், படத்தின் தலைப்பு வரும் செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.