1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 7 ஜூலை 2018 (19:23 IST)

நீண்ட இடைவெளிக்கு பின் இணையும் சிம்பு-ஜோதிகா

சிம்பு நடித்து இயக்கிய 'மன்மதன்' திரைப்படத்திலும், கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'சரவணா' படத்திலும் சிம்பு-ஜோதிகா இணைந்து நடித்தனர். அதன்பின் ஒருசில படங்களில் சிம்புவுடன் ஜோதிகா நடிப்பதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் நடிக்கும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை
 
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் ஜோதிகா நடிக்கும் படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார். பாலா இயக்கிய 'நாச்சியார்' படத்திற்கு பின்னர் ஜோதிகா நடித்து வரும் திரைப்படம் 'காற்றின் மொழி'. இந்த படத்தை 'மொழி' படத்தை இயக்கிய ராதாமோகன் இயக்கி வருகிறார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்கின்றார். அவர் நடித்த சுவாரஸ்யமான காட்சிகள் இன்று படமாக்கப்பட்டன. இந்த படத்தில் நடிக்கும் அனைவரும் சிம்புவுடன் இந்த காட்சியில் தோன்றுகின்றனர் என்பது ஒரு சிறப்பு

ஏற்கனவே சிம்பு, ஜோதிகா இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே